அமராவதிநகர் ராணுவ பயிற்சி பள்ளியில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு

875பார்த்தது
அமராவதிநகர் ராணுவ பயிற்சி பள்ளியில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு
உடுமலை: இயற்கை எழில் கொஞ்சும்
ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமராவதி அணையை பின்னணியாகக் கொண்டு சைனிக்பள்ளி அமைந்து உள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியில் உருவாகி பாதுகாப்புத்துறையில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்தப் பள்ளியின் முதல்வராக கேப்டன் கே. மணிகண்டன் பொறுப்பேற்றார்.
சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர் 2005- ல் மெக்கானிக்கல் என்ஜினீயரிங்கில் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்தார்.
2010-ல் லாங் என். டி. படிப்பையும், 2017-ல் வெலிங்டனில் பட்டமும் பெற்றார். மணி கண்டன் இதற்கு முன்பு சில்காவில் கல்வி அதிகாரியாக
வும் வெலிங்டன் மற்றும் இந்திய கடற்படை அகாடமி எழிமலையில்அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.

முதல்வராக பதவியேற்ற முதல்வருக்கு பதினொன்றாம் வகுப்பு கேடட்கள் மற்றும் பள்ளி இசைக் குழுவினரால் சிறப்பு மரியாதை சிவப்பு கம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது

டேக்ஸ் :