உடுமலை நகராட்சியில் தெருவிளக்கு பராமரிப்பில் அலட்சியம்

72பார்த்தது
உடுமலை நகராட்சியில் தெருவிளக்கு பராமரிப்பில் அலட்சியம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு யூ. எஸ். எஸ் காலனி பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் இரண்டாவது வீதியில் கடந்த சில தினங்களாகவே தெருவிளக்கு பழுதடைந்து காணப்படுகின்றது இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் தெருவிளக்கு பராமரிப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர் இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர் மேலும் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு மேற்கொள்பவர்கள் உடனே தெரு விளக்கை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி