உடுமலை நகர மன்ற கூட்டத்தில் திமுக செயலாளர் காரசார விவாதம்!

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் மத்தின் தலைமையில் நகர மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் நகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக உடுமலை முன்னாள் நகர்மன்ற திமுக தலைவரும், திமுக நகர செயலாளரும் , 33வார்டு உறுப்பினரான வேலுச்சாமி கூட்டத்தில் பேசும் பொழுது உடுமலையில் கடந்த செப் -20ம் தேதி நகராட்சி சார்பில் ரவுண்டானா பகுதியில் காளைமாடு சிலை திறப்பு , அண்ணா உட்பட தலைவர்கள் சிலை திறப்பு அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் ஏன் போடவில்லை என நகர மன்ற தலைவரிடம் காரசார விவாதத்தில் ஈடுபட்டதால் நகர மண்ட கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நகர மன்ற தலைவர் மத்தீன் பேசும் பொழுது மாவட்ட நிர்வாகம் தான் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெயர்கள் அழைப்பிதழ் மற்றும் கல்வெட்டில் போட்டார்கள் என தெரிவித்தார் இதற்கு முன்னாள் நகராட்சி தலைவர் வேலுச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார் பின்னர் அமைச்சர் கயல்விழி பெயருடன் புதிய கல்வெட்டு பொருத்தபடும் என நகர மன்ற தலைவர் மத்தீன் உறுதி அளித்தார்

உடுமலை நகர மன்ற கூட்டத்தில் அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி பெயர் புறக்கணிப்பு செய்தது குறித்து திமுக நகர செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவருமான வேலுசாமி காரசார விவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி