திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதிகளில் உடுமலை திருப்பதி கோவில் வெங்கடேச பெருமாள் ஆண்டாள் பத்மாவதி தயார் ஹயக்ரீவர் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட பல கடவுள்கள் எழுந்திருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். தன்வந்திரி ஜெயந்தி முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சிறப்பு பூஜை மற்றும் கிராமம் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வாக அங்குர ஹோமம் 2-ம் நாள் நிகழ்வாக முதல் காலம் மற்றும் கால ஹோமம் நடைபெற்றது. நேற்று (அக் 30) 3 ம் கால ஹோமம் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.