உடுமலை குட்டை திடல் ஏலம் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

2211பார்த்தது
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவி லின் திருவிழா சுற்றுவட்டார கிராமங்களின்
திருவி ழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 28-ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திரு விழாவுக்காக ஆயத்தப்பணி கள் தொடங்குகிறது. இத னையடுத்து ஏப்ரல் மாதம் 4-ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்வு டன் திருவிழா தொடங்கு கிறது.

விழாவின் உச்சநிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் மாதம் 13 -ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. மேலும் 14-ந் தேதி இரவு ம மணிக்கு குட்டை திடலில் வாணவேடிக்கைநடைபெற வுள்ளது.

திருவிழா நாட்களில்
வருவாய்துறைக்கு சொந்தமான 91 சென்ட் பரப்பளவுள்ள குட்டை திடலில் ராட்டினம், மரணக்கிணறு உள் ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல்ஏராளமான கடைகள் அமைக்கப்படும். இவ்வாறு பொழுதுபோக்கு அம்சங் கள் அமைப்பதற்கான உரி மம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் வருவாய்த் துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.

அந்தவகையில் நடப்பு ஆண்டில் வரும் ஏப்ரல் மாதம் 7-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக குட்டை திடல் ஏலம் வரும் 27-ந் தேதி மதியம் 12 மணிக்கு உடுமலை தாலுகா அலுவல கத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்துக்காக அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஏலத்தொகை யாக ரூ. 46 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பங்குத்தொ கையான ரூ. 11 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சாரத் தொகையாக 24-ந் தேதி (நாளை) காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கேட்பு வரைவோலையாக செலுத்த வேண்டும். கடந்த ஆண்டில் அரசு நிர்ணயித்த தொகை அதிக மாக இருப்பதாகக் கூறி பல முறை ஏலம் ஒத்தி வைக்கப் பட்டது. நடப்பு ஆண்டில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :