கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் செல்வகுமார் (40) லாரி ஓட்டுனர். சஜூ (40) லாரி கிளீனர். இருவரும் லாரியில் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து அடுப்பு எரிக்கும் விறகுகளை திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். விறகுகளை இறக்கி விட்டு உடுமலை சாலையில் லாரியை நிறுத்தி உள்ளனர். இருவரதும் நண்பரான பாலக்காட்டை சேர்ந்த திருப்பரில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் என்பவருடன் சேர்ந்து மூவரும் மது அருந்தி உள்ளனர். நள்ளிரவு வரை மூவரும் மது அருந்திய நிலையில் இன்று காலை செல்வகுமார் எழுந்து பார்த்த பொழுது கிளீனர் சஜு தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். மேலும் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுனர் செல்வகுமார் இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் இறந்து கிடந்த சஜூவின் உடலை மிட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் பார்வையிட்டார். மேலும் இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவான ஆட்டோ ஓட்டுநர் கண்ணனையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து லாரி ஓட்டுநர் செல்வக்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.