ம.பி: சூடான எண்ணெயில் செல்போன் தவறி விழுந்து பேட்டரி வெடித்து சிதறியதில் சந்திர பிரகாஷ் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திர பிரகாஷ் சமைத்துக் கொண்டே அடிக்கடி செல்போன் பயன்படுத்திய போது இந்த விபத்து நடந்துள்ளது. படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது. ஆம்புலன்ஸ் தாமதமாக சென்றதே சந்திர பிரகாஷ் உயிரிழந்ததற்கான காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.