உடுமலை: குண்டும் குழியுமான சாலையில் மக்கள் அவதி

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செஞ்சேரிமலை ரோட்டில் இருந்து மூங்கில் தொழவு ஊராட்சி செல்லும் இணைப்பு ரோட்டை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்து சாலையை பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி