திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கர் ஊராட்சி மலையாண்டி கவுண்டனூர் கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பல ஆண்டுகளாக ஓட்டு கட்டிடத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகின்றது. இதனால் மழை நாட்களில் மழை நீர் வகுப்பறைக்குள் புகுந்து விடுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கூரைகளை சிமெண்ட் கூரைகளாக மாற்ற வேண்டும் என பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.