தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களும் குடிநீர் திறந்துவிடும் பணியாளர்களும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் குடிநீர் குழாய் திறந்துவிடும் தொழிலாளிகள் முறையாக சம்பளம் கூட வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாகவும் இதை தெரிந்துகொண்ட தொழிலாளி முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கேள்வி கேட்டால் உடனடியாக பழிவாங்கும் நடவடிக்கையாக வேலையை விட்டு நிறுத்தி விடுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தில் எப்போது தனியார் மயமாக்கப்படாதோ அப்போதிருந்து பாதிக்கப்பட்டவர்கள் இந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் திறந்துவிடும் பணியாளர்கள். சட்டம் என்ன சொல்கின்றதோ அதன் பிரகாரம் குறைந்தபட்ச ஊதியம் நீதிமன்றம் சொல்லியது போல் ஒரு நாளைக்கு ரூ. 638 ரூபாய் வழங்கிட வேண்டும் எனவும் ஆனால் இங்கு வழங்குவது ரூ. 507 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு அரசே நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருப்பதும், சட்டத்தை மதிக்காமல் இருப்பதும், போனஸ் போன்ற உரிமையை மறுப்பது இந்த அரசுக்கு என்றார். மேலும் தீபாவளிக்கு இடையே இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழக அரசும் பணியாளர்களுக்கு தீபாவளி போனசை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி