உடுமலை அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்!!

1901பார்த்தது
உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பெதம்பம்பட்டி அருகில் உள்ள ஜே கிருஷ்ணாபுரம் கிளை வாய்க்கால் மூலம் 6500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் ஆண்டுல பாசனத்தில் இரண்டாம் சுற்றில் ஜே கிருஷ்ணாபுரம் கிளை கால்வாய் பகுதியில் பாசனத்திற்கு ஐந்து நாட்கள் தண்ணீரை வழங்க வேண்டிய நிலையில் தற்சமயம் நான்கு நாட்கள் மட்டும் வழங்கி விட்டு தண்ணீர் முன்னறிவிப்பின்றி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. அரசாணையில் ஐந்து நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தண்ணீர் நிறுத்தம் செய்துள்ளனர்
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதிலளிக்க காரணத்தால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உடுமலை செஞ்சேரிமலை சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு
வந்த பொது பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் முறையாக வழங்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்ததால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். உடுமலை அருகே சாலை மறியல் போராட்டம் காரணமாக உடுமலை செஞ்சேரி மலை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது