சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு 3 ஆயிரம் மூட்டைகள் நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டுவந்து இருந்தனர். திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியா பாரிகள் கலந்து கொண்டு குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ. 7, 550 முதல் ரூ. 8, 116 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ. 7, 030 முதல் ரூ. 7, 500 வரையிலும், மூன் றாம் ரக நிலக்கடலை ரூ. 6, 430 முதல் ரூ. 7 ஆயிரம் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ. 84 லட்சத்து 15 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.