அவினாசி அருகே பெரியாயிபாளையம் ஜிவா நகர் பகுதியில் அவினாசி போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திருமுருகன்பூண்டி பெரியாயிபாளையத்தை சேர்ந்த தமிழ்செல் வன் (வயது 26), குமரவேல் (28), ஞானசிவம் (25), நவீன்கு மார் (26) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 சேவல், ரூ. 1200 பறிமுதல் செய்யப்பட்டது.