சவுக்கு சங்கர் மீது திருச்சி போலீஸ் வழக்கு பதிவு

56பார்த்தது
சவுக்கு சங்கர் மீது திருச்சி போலீஸ் வழக்கு பதிவு
தமிழகத்தின் பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேனி விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர். மேலும் சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துக்கள் அடங்கிய பேட்டி தொடர்பான வீடியோவை வெளியிட்ட தனியார் யூடியூப் சேனல் மீதும் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது திருச்சி மாநகரச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சவுக்கு சங்கர் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :