பாலைவனமாக மாறிய திருச்சி காவேரி ஆறு

571பார்த்தது
பாலைவனமாக மாறிய திருச்சி காவேரி ஆறு
திருச்சியைப் பொறுத்தவரை, ஒரு காலத்தில் காவிரிக்கரைகள் மிகவும் செழித்திருந்த நிலையில், தற்போது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் மிகவும் வறண்டு காணப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்திற்கு மேட்டூரில் இருந்து வரக்கூடிய தண்ணீர், முக்கொம்பு மேலணைக்கு வந்தபிறகு, காவிரி கொள்ளிடம் என இரண்டாக அதைப் பிரித்து அனுப்புவார்கள். ஏனெனில் இங்கு அணையோ அல்லது தண்ணீரை தேக்கிவைக்கும் வசதிகளோ கிடையாது. மேட்டூரில் இருந்து வரக்கூடிய நீரை பிரித்துமட்டுமே அனுப்பமுடியும்.
அவ்வாறு காவிரி ஆற்றில் சுமார் 60, 000 கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 3. 5 லட்சம் கன அடி நீரும் பிரித்து அனுப்பமுடியும்.  ஆனால் தற்போதைய சூழலில் காவிரி ஆற்றில் 178 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது.

இந்த நீர்தான் திருச்சி மாவட்ட மக்களுக்கு அடிப்படை நீராதரமாக விளங்கிறது என்பதால், திருச்சியில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறாது.

தொடர்புடைய செய்தி