கோடைகால பயிற்சி நிறைவு விழா மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்

60பார்த்தது
கோடைகால பயிற்சி நிறைவு விழா மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடை கால பயிற்சி முகாம் ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவர், சிறுமிகள், மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் கால்பந்து , ஹாக்கி, தடகளம், கையுந்து பந்து ஆகிய போட்டிகளுக்கு பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழாவான இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 356 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.


மேலும் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் மற்றும் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி