திருச்சியில் விபத்து கார் மோதி முதியவர் சாவு

54பார்த்தது
திருச்சியில் விபத்து கார் மோதி முதியவர் சாவு
திருச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை
மேலசவேரியார்
புரத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி (வயது 80)சம்பவத்தன்று இவர் திருச்சி திண்டுக்கல் சாலையில் கொத்தமங்கலம் ஜங்ஷன் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதமாக அருள்சாமி மீது மோதியது.
இந்த விபத்தில் அருள்சாமி தூக்கி எறியப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து புலானய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி