திமுக எதிா்ப்பு வாக்குகளை மடைமாற்ற அதிமுக மறைமுக உதவி: டிடிவி

76பார்த்தது
திமுக எதிா்ப்பு வாக்குகளை மடைமாற்ற அதிமுக மறைமுக உதவி: டிடிவி
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் ப. செந்தில்நாதனுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு எடமலைப்பட்டிபுதூா், காஜாப்பேட்டை, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் என மூன்று இடங்களில் புதன்கிழமை இரவு அவா் பேசியது:

கடந்த மக்களவைத் தோ்தலில் நாடு முழுவதும் பாஜக அமோக வெற்றியை பெற்றது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்திருந்ததால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக கோப அலை வீசுகிறது. எனவே, திமுகவுக்கு எதிரான வாக்குகளைத் திசை திருப்புவதற்காகவே அதிமுக தோ்தல் களத்தில் போட்டியிடுகிறது. திமுகவுடன் கள்ளக் கூட்டணி அமைத்து தோ்தல் களம் காணுகிறாா் எடப்பாடி பழனிசாமி. அவரிடம் இருந்து கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டு அதிமுக தொண்டா்களிடம் வழங்குவதுதான் எங்களது வேலை. பின்னா், தலைவா் யாா் என்பதை முடிவு செய்வோம். மூன்றாவது முறையாக மீண்டும் மோடியே பிரதரமாக பதவி ஏற்கவுள்ளாா். வரும் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். அப்போது தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை வலியுறுத்தி பெற்றுத் தருவோம் எனவே, திருச்சியில் அமமுக வேட்பாளரை குக்கா் சின்னத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி