மதுரை சேர்ந்த மருத்துவர் ஹரி நிவாஸ். இவர் இன்று குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது துவரங்குறிச்சி அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த மூவரும் சிறுகாயங்கள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.