குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படும் பிரச்சனை இருக்கிறது. இதை மறைக்க பலரும் பல மருந்துகளை பயன்படுத்துகின்றனர். போதுமான தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கம், இரவில் தாமதமாக கணினி மற்றும் மொபைல் ஃபோன்களை பார்ப்பது, அதிக சோர்வு, மன அழுத்தம், உலர் கண்கள், கண்களில் ஏற்படும் ஒவ்வாமை, உடலில் நீர் பற்றாக்குறை, நீரிழப்பு, சூரிய ஒளி, மாசுபாடு ஆகியவை கண்களில் கருவளையம் ஏற்பட காரணங்களாகும்.