குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கிய சாலையில், பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாலையில், சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று முன்னாடி சென்ற காரை முந்திசெல்ல முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.