போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி -மாணவ மாணவிகள் பங்கேற்பு

74பார்த்தது
போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் போதை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டி தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை லால்குடி காவல் உதவி ஆணையர் ரகுபதி ராஜா துவக்கி வைத்தார்.
பேரணியில் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தனி பிரிவு காவலர்கள் அன்பரசன் மகாதேவன் , பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி