காவலர்கள் நீண்ட வரிசையில் நின்று தபால் வாக்குகளை பதிவு!

84பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மற்றும் பிற தொகுதிகளுக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும் பனி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு செலுத்தும் மையத்தில் துவக்கம் ஏராளமான ஆண் பெண் காவல் துறையினர் நீண்ட வரிசையில் நின்று தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்


தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இந்நிலையில் இந்த தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் தங்கள் வாக்குகளை தவறாமல் செலுத்துவதற்காக அவர்களுக்கு தபால் வாக்குகள் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய படிவங்கள் வழங்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது


இதற்காக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஞ்சல் வாக்கும் செலுத்தும் மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி துவங்கியது இதில் தபால் வாக்கு செலுத்தும் ஆண் பெண் காவல்துறையினர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று தங்கள் தபால் வாக்குகளை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மற்றும் பிற தொகுதிகளுக்கான என அமைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டியில் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் இந்த வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இந்த தபால் வாக்கு பணியை பார்வையிட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி