தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன், என்பவரின் 1ஆடும், அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரின் இரண்டு ஆடுகளும், பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்த மூக்கையா என்பவரின் இரண்டு ஆடுகளும் 20-02-2024 செவ்வாய்க்கிழமை இரவு வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து 21-02-2024 புதன்கிழமை காலை 11 மணியளவில் ஆடுகளின் உரிமையாளர்கள் மாரீஸ்வரன், கணேசன், மூக்கையா ஆகியோர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.