ஜி. கே வாசன் சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

1019பார்த்தது
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ஜி. கே வாசன் சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தமிழக மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜயசீலனை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வாகனத்தில் நின்றவரே சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், இதில் கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி