மாநகரப் பகுதியில் திடீரென மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

1877பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் கடந்த பத்து தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர் இந்நிலையில் வானிலை மையம் கடற்கரைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது

இதைத்தொடர்ந்து நேற்று இரவு தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் படத்த காற்றுடன் மேக கூட்டம் காணப்பட்ட நிலையில் மழை பெய்யவில்லை இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போகுது மாநகரப் பகுதி முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது விட்டுவிட்டு பெய்து வரும் இந்த மழை கடற்கரைச் சாலை, மட்டக்கடை பகுதி, பிரையன்ட் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, கால்டுவெல் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது இந்த கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

அதிகாலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையால் தூத்துக்குடி மாநகரப் பகுதியை சுற்றியுள்ள உப்பலங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி