உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்

580பார்த்தது
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கல்
தூத்துக்குடியில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5லட்சம் நிவாரண நிதியுதவியை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.   தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி தூத்துக்குடி மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். குடிமைப்பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம், வட்டாட்சியர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி