10ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

62பார்த்தது
10ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
தூத்துக்குடியில் வருகிற 10ஆம் தேதி திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகம் செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி டவுண் மற்றும் சிப்காட் துணை மின்நிலையத்தில் உள்ள சிவன் கோவில் மற்றும் மருத்துவ கல்லூரி மின் தொடர்களில் 10ஆம் தேதி (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக வடக்கு ரதவீதி, மேல ரதவீதி, ரெங்கநாதபுரம், ரகுமத்துல்லாபுரம், மாதாங்கோவில் தெரு, எட்டையபுரம் ரோடு தொடர்ச்சி, கல்லூரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி