இஸ்லாமியரிடம் அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகரிப்பு!

61பார்த்தது
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட திமுக கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது தாங்கள் குடும்பத்துடன் கனிமொழி கருணாநிதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்

பிரச்சாரத்தின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் எம். எஸ். எப் ரகுமான், தினேஷ்புரம் மீராசா, முகமது உபேஷ், அரபி, திமுக மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட பிரதிநிதியும் வட்ட செயலாளருமான தெர்மல் சக்திவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி. எம். மதியழகன், அரசு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல், பகுதி செயலாளர்கள் டூவிபுரம் ரவீந்திரன், நிர்மல் ராஜ், ஜெயக்குமார், மகளிரணி ரேவதி, வட்டச் செயலாளர் கங்கா ராஜேஷ், கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், பகுதி இளைஞர் அணி சூரியா, ரவி, இஸ்மாயில், மைதீன், காங்கிரஸ் மிராசா, மதிமுக மகராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி