துறைமுகம் சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

57பார்த்தது
துறைமுகம் சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
தூத்துக்குடி வ. உ. சி. துறைமுகம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகர் திருக்கோவிலில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 6-ஆம் தேதி காலையில் மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஸ்ரீமகாலட்சுமி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, தனபூஜை, கோபூஜை, நவக்கிரஹ ஹோமம் பின்னர் தீபாராதனை நடந்தது.

மாலையில் வ. உ. சி. துறைமுகம் விருந்தினர் மாளிகைக்கு பின்புறம் உள்ள கடலிலிருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தது. அங்கு விக்னேஸ்வரபூஜை மற்றும் பல ஹோமங்கள் நடந்தது. 7-ஆம் தேதி மாலையில் முதல் கால யாகசாலை பூஜை தீபாராதனையும், தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது. 9-ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி 4-ஆம் கால யாகசாலை பூஜை நடந்தது.

அதன்பின் ஸ்ரீசித்திவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீஐயப்பன் விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று தூத்துக்குடி சிவன்கோவில் பிரதான பட்டர் சிவஸ்ரீ ஆர். செல்வம் அருளாசி வழங்கினார். கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ எஸ். சந்தோஷ்பட்டர், சிவஸ்ரீ எஸ். மிகண்ட பட்டர், கோவில் அர்ச்சகர்கள் டி. சங்கர்பட்டர், கே. குமார்பட்டர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி