மதுபோதையில் தாக்கி மிரட்டல்: 2பேர் கைது!

74பார்த்தது
மதுபோதையில் தாக்கி மிரட்டல்: 2பேர் கைது!
தூத்துக்குடியில் மதுபோதையில் தாக்கி மிரட்டல் விடுத்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி முள்ளக்காடு நேதாஜி நகரைச் சேர்ந்தவர் நஸ்ரின் மகன் எடிசன் (53). இவர் அங்குள் பாரில் மது குடித்துக் கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கணேசன் (55), முருகன் மகன் சுகுமார் (22) ஆகிய 2 பேரும் மதுபோதையில் அவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி மிரட்டல் விடுத்தார்களாம்.

இது குறித்து எடிசன் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் வழக்கு பதிவு செய்து கணேசன், மற்றும் சுகுமார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி