அவர் லேண்ட் ஒப்பந்த நிறுவனம் சம்பளம் வழங்காததால் போராட்டம்!

568பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகன ஓட்டுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு மாத மாதம் ஐந்தாம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாதம் தற்போது பதினோராம் தேதி வரை ஆகியும் தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பைகளை அள்ள ஒப்பந்தம் எடுத்துள்ள சென்னையைச் சேர்ந்த அவர் லேண்ட் என்ற ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஒப்பந்ததாரருக்கு சம்பளம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.


இதன் காரணமாக வடக்கு மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் என 300க்கும் மேற்பட்டோர் இன்று தங்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும் ஓட்டுநர்களுக்கான உயர்த்தப்பட்ட சம்பளம் ரூபாய் 550 தூய்மை பணியாளர்களுக்கான உயர்த்தப்பட்ட சம்பளமான ரூபாய் 450 உடனடியாக வழங்க வேண்டும் ஈஎஸ்ஐ பிஎப் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரத்தின் வடக்கு மண்டல பகுதியில் 15 வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி