பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி: காவலர் மீது வழக்கு பதிவு

76பார்த்தது
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் சுரேஷ் இவர் தூத்துக்குடி கதிர்வேல் நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் மதுபோதையில், ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் தவறாக சைகை காட்டி, அவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தக் குடும்பத்தினர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், அந்த காவலர் மீது உரியவிசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் தலைமையில் அந்த காவலர் மீது விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி