டிஎன்பிசி குரூப்4 தேர்வை 58 ஆயிரத்து 373 பேர் எழுதுகின்றனர்

65பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெறும் டிஎன்பிசி குரூப் 4 தேர்வை 200 மையங்களில் 58 ஆயிரத்து 373 பேர் எழுதுகின்றனர் இதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு தேர்வு மையங்களில் போடப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் கிராம நிர்வாக அதிகாரி வன காவலர்கள் உள்ளிட்ட மொத்தம் 6, 244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு இன்று தமிழக முழுவதும் நடைபெறுகிறது இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் கோவில்பட்டி ஸ்ரீவைகுண்டம் என மொத்தம் 200 மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது இந்த தேர்வை 58, 373 பேர் எழுதுகின்றனர்

தேர்வு எழுதும் மையங்களில் தேர்வர்களுக்கு வசதியாக அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன மேலும் தேர்வு மையங்களில் கண்காணிப்பை அதிகரிக்க போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு தேர்வு கண்காணிக்கப்பட்டு வருகிறது

டேக்ஸ் :