தாமிரவருணி ஆற்றில் கிராம மக்களுக்கு ஒத்திகைப் பயிற்சி

81பார்த்தது
தாமிரவருணி ஆற்றில் கிராம மக்களுக்கு ஒத்திகைப் பயிற்சி
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடரில் சிக்கியோரைக் காப்பாற்றுவது உள்ளிட்டவை குறித்து திருச்செந்தூா் தீயணைப்பு-மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ராஜமூா்த்தி விளக்கிப் பேசினாா். ஆற்றில் தவறி விழுந்தோரைப் படகு மூலம் மீட்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

சமூக ஆா்வலா்கள் ஜவகா், ஜாகிா் உசேன், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா். சிறப்பு நிலைய அலுவலா் மோகன், வீரா்கள் ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், வீரசெல்வன், பாலசுப்பிரமணியன், சேகா், விமல் இமானுவேல் ஆபிரகாம், மணிகண்டன், இசக்கி, கரோல் ஜோசப், முத்து மணிகண்டன் ஆகியோா் செயல்விளக்கம் அளித்தனா். ஏற்பாடுகளை ஆத்தூா் கிராம நிா்வாக அலுவலா் மூக்காண்டி செய்திருந்தாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி