ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

53பார்த்தது
ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி அருகே உள்ள ராஜாவின் கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஜப்தி செய்ய தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள ராஜாவின் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் கென்னடி இவர் ராஜாவின் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனராக பணி புரிந்து வந்தார். இவரை பணி செய்ய தகுதி இல்லை என்று கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் பணி நீக்கம் செய்தார்.

இதைத் தொடர்ந்து கென்னடி தூத்துக்குடி தொழிலாளர் நல அலுவலகத்தில் புகார் செய்தார். ஆனால் அதில் சமரசத் தீர்வு ஏற்படாததால் நெல்லையில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த அப்போதைய நீதிபதி பாலசுப்ரமணியம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடனடியாக கென்னடிக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால் ராஜாவின் கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கென்னடிக்கு பணி வழங்காமல் காலம் கடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் கென்னடி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனிதரை விசாரணை செய்த நீதிபதி உடனடியாக வருகிற 9. 10. 2024 தேதிக்குள் ராஜாவின் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் கென்னடிக்காக தூத்துக்குடி வழக்கறிஞர் ஐபி பாலசேகர் ஆஜரானார்.

தொடர்புடைய செய்தி