தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் இயக்க கூட்டத்தில் தீர்மானம்!

85பார்த்தது
தூத்துக்குடி வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் பெண்களை பாதுகாக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு 5000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கோரிக்கை

சர்வதேச வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் தினம் ஜூன் 16ஆம் தேதி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது இதை முன்னிட்டு தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் சார்பில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது மாநில பொதுச் செயலாளர் கிளாரா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்

இந்த கூட்டத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய வீட்டு வேலை தொழிலாளர் மாநாட்டு ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்திட வேண்டும் , வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதுகாக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும், மேலும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்து ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை சமூக நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வீட்டு வரி வசூல் செய்வதில் ஒரு சதவீத பணத்தை அதற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீர்மானம் மற்றும்கோரிக்கை விடுக்கப்பட்டது