மின் கட்டணம் பல மடங்கு உயர்வு: கூலித்தொழிலாளிகள் வேதனை!.

59பார்த்தது
தூத்துக்குடி லேபர் காலனி தூத்துக்குடி வ உ சி துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்


இந்த லேபர் காலணியில் வசிப்பவர்கள் அனைவருமே கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருவார்கள் இந்நிலையில் பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த இவர்களுக்கு துறைமுக நிர்வாகம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக மின் இணைப்பு வழங்கப்பட்டது


இந்த மின் இணைப்பு வழங்கப்பட்ட பின்பு லேபர் காலனி பகுதியில் குடியிருப்பவர்கள் மின் கட்டணமாக தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 14. 50 காசு என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணத்தை அதற்கான தனியாக ஒரு புதிய துறைமுகம் லேபர் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் என்ற அமைப்பு மூலம் மாதம் மாதம் மின்கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்


இதன் காரணமாக மாதம் 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மின் கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது இதனால் கூலி தொழிலாளர்களான தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் தங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என லேபர் காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி