விளாத்திகுளம் அருகே வள்ளிநாயகபுரம் கிராமத்தில் விஷ மருந்து கலந்த அரிசியை சாப்பிட்டு 3 ஆடுகள் உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகபுரம் சண்முகச்சாமி என்பவரின் மகன் செந்தில்குமாரசாமி (45) இவர் 100 ஆடுகளை வைத்து ஆடு வளர்ப்பும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் ஊரின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு விவசாய நிலத்தில் விஷ மருந்து கலந்து வைக்கப்பட்டிருந்த அரிசியை சாப்பிட்டு 3 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது, இதனை அடுத்து செந்தில்குமாரசாமியின் ஆடுகளை ஒரு சிலர் வேண்டுமென்றே அரிசியில் விஷ மருந்து கலந்து கொன்றதாக செந்தில்குமாரசாமி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரியின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.