திருவாரூரில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் மாரத்தான் ஓட்ட போட்டியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் மாரத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது இந்த போட்டியை ஆட்சியர் சாரஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில்ஆண்கள் மற்றும் பெண் பெண்களுக்கு இரண்டு பிரிவுகளாக 17 வயது முதல் 25 வயது வரையும் 25 முதல் மூத்தவர்கள் ஓட்டம் நடைபெற்றது இதில் முதல் இடம் பெற்றவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் இரண்டாம் இடம் 3000 ரூபாய் , மூன்றாம் இடம் 2000 ரூபாய் மற்றும் 10 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், நகர மன்ற துணைத் தலைவர் அகிலா, நகர்மன்ற உறுப்பினரும்
திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.