மருந்து வணிகர்களின் கவன ஈா்ப்பு இயக்கம்

51பார்த்தது
மருந்து வணிகர்களின் கவன ஈா்ப்பு இயக்கம்
மருந்து வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் மன்னாா்குடியில் கருப்புப் பட்டை அணிந்து கவன ஈா்ப்பு இயக்கம் நடைபெற்றது.

சென்னை ஓட்டேரியை சோந்தவா் வினேத்குமாா் (35). அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தாா். இவரிடம் சில ரெளடிகள் வந்து மாமுல் கேட்டு தகராறு செய்ததையடுத்து வினோத்குமாா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இதில் தொடா்புடைய ஒரு ரெளடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், புகாரை திரும்பப் பெறுமாறு சில ரெளடிகள் வினோத்குமாரை மிரட்டியுள்ளனா். அவா் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த டிச. 29-ஆம் தேதி வினோத்குமாா் படுகொலை செய்யப்பட்டாா்.

வினோத்குமாரை கொலை செய்தவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், மருந்து வணிகா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றி தாமதமின்றி நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

மன்னாா்குடி கிளை மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற கவன ஈா்ப்பு இயக்கத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி எஸ். ராமச்சந்திரன் உள்ளிட்ட சில்லறை மருந்து வியாபாரிகள் கருப்புப் பட்டை அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி