போலியான வங்கி வரைவோலை வழங்கி ஏமாற்றிய மர்ம நபர்.

50பார்த்தது
போலியான வங்கி வரைவோலை வழங்கி ஏமாற்றிய மர்ம நபர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அங்காளம்மன் கோயில் தெருவிற்கு எதிரில் வசிப்பவர் சந்திரா வயது(70) இவர் கணவர் இறந்து பல வருடங்கள் ஆனதால் இவர் மீன் வியாபாரம் செய்தும் தனியாக வசித்து வந்துள்ளார்

இவர் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது கதவைத் தட்டிய டிப்டாப் வெள்ளை உடையில் வந்த மர்ம ஆசாமி ஸ்கூட்டரில் வந்தவர் இவரது வீட்டு முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு

மூதாட்டியை வீட்டிலிருந்து வெளியே அழைத்து உங்களுக்கு முதியோர் உதவித்தொகை ஆறு மாதத்திற்கு வந்துள்ளது ஏன் இன்னும் சென்று வாங்கவில்லை இன்று தான் கடைசி நாள் வாங்கிக் கொள்ளுங்கள்

இது அது மட்டும் இல்லாமல் ரேஷன் கடையில் உங்களுக்கு அரிசி, பருப்பு இவை அனைத்தும் தருவார்கள் இந்த வங்கி வரைவோலை இதில் பணம் உங்களுக்கு எவ்வளவு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளேன்

போய் ரேஷன் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்

என்று கூறியுள்ளான்

அந்த வெள்ளை வரைவோலை காகிதத்தை தாருங்கள் என்று மூதாட்டி கேட்டதற்கு

ரூபாய் 2700 கேட்டுள்ளான் என்னிடம் பணம் இல்லை என்று மூதாட்டி கூறியதற்கு அருகில் உள்ள எதிரில் உள்ள வீட்டில் வாங்கிக் கொடுங்கள் என்று மர்ம நபர் கேட்டதால் மூதாட்டி எதிரில் உள்ள வீட்டில் கடன் வாங்கி ரூபாய் 2700 வழங்கியுள்ளார்

இதனைப் பெற்றுக் கொண்டு மர்ம நபர் வந்த இரு சக்கர வாகனத்தில் அந்த பகுதியில் இருந்து மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you