29-இல் திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா

61பார்த்தது
முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள அறுபடை வீடுகளில் 5 -ஆம் படைவீடாய் போற்றப்படும்இக்கோயிலில் நிகழாண்டு ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா 27-ஆம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது.

இதையொட்டி 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி பரணியும், 29-ஆம் தேதி திங்கள்கிழமை ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவும், 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவும், 31 ஆம் தேதி புதன்கிழமை 3-ஆம் நாள் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.

மேலும், 29-ஆம் தேதி இரவு 7 மணிக்கு கலைமாமணி கிராமிய இசை கலாநிதி திரையிசை பின்னணி பாடகா் வேல்முருகன் பக்தி இன்னிசை கச்சேரியும், 30-ஆம் தேதி சூப்பா் சிங்கா் புகழ் திரைப்பட பின்னணி பாடகா் முத்துசிற்பி முத்தமிழ் ராகங்கள் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், 31-ஆம் தேதி கலைமாமணி சபரிமலை அரிவராசனம் விருது பெற்ற வீரமணி ராஜு பக்திக்கான கந்தா்வ அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீதரன் கோயில் இணை ஆணையா் கூடுதல் பொறுப்பு ஆ. அருணாசலம், கோயில் அறங்காவலா்கள் கோ. மோகன், ஜி. உஷாரவி, வி. சுரேஷ்பாபு, மு. நாகன் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி