அறுபடை வீடுகள் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி, புஷ்பாஞ்சலி, இலட்சார்ச்சனை, திருவிழா 3-வது நாளில் இன்று காலை மலைக்கோவில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், கதம்ப பொடி, போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானின் பக்தி பாடல்கள் பாடி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.