ஆர். கே. பேட்டை அருகே சமத்துவபுரத்தில் சீரழியும் பூங்கா

66பார்த்தது
ஆர். கே. பேட்டை அருகே சமத்துவபுரத்தில் சீரழியும் பூங்கா
ஆர். கே. பேட்டை ஒன்றியம், சந்தானவேணு கோபாலபுரம் ஊராட்சியில் சமத்துவபுரம் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இங்குள்ள சமுதாயக்கூடம், சிறுவர் பூங்கா, நுழைவளைவு மற்றும் குடியிருப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

சிறுவர் பூங்காவில், புதிதாக கம்பி வேலி மற்றும் விளையாட்டு கருவிகள் நிறுவப்பட்டன. இதனால், பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சிறுவர் பூங்காவில் ஏற்படுத்தப்பட்ட கம்பி வேலி சுருட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பூங்காவில், கால்நடைகள் ஓய்வெடுக்க துவங்கியுள்ளன. விளையாட்டு சாதனங்களும் பாழடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சமுதாயக்கூடம், நுாலகம், பூங்கா உள்ளிட்டவற்றை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :