மாசி பெருவிழா: முருகப்பெருமான் வள்ளி அம்மை திருக்கல்யாணம்

82பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரமோற்சவம் நிகழ்ச்சி மார்ச் மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

இந்நிகழ்ச்சியில் ஒன்பதாவது நாள் மாசி பெருவிழாவில் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வள்ளி தாயாரை கடத்திச் சென்று

திருத்தணி முருகன் கோயில் மலை மீது வள்ளி மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் சீர்வரிசை பொருட்களுடன் வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் இனிதாக நடைபெற்றது

பக்தர்களுக்கு அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் மாங்கல்ய பிரசாதம் வழங்கினார்கள்

பக்தர்கள் அமர்ந்து பார்ப்பதற்கும் மற்றும் மருத்துவ வசதிகளையும் திருக்கோயில் நிர்வாகத்தினர் போதிய அளவில் செய்யவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு ஒரு சில பக்தர்களுக்கு மட்டும் மாங்கல்ய பிரசாதம் வழங்கியதாக பக்தர்கள் குற்றச்சாட்டு முன் வைத்தனர் இது சர்ச்சையாக இருந்தது மேலும் திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்தில் இந்த ஆண்டு பொதுமக்களுக்கு மேடை அமைத்து திருமணம் நடைபெறுவது போல் அலங்கார மேடை அமைத்து திருமணம் நடத்தினார்கள் இதில் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் இடம் கொடுத்ததால் சாமானிய பக்தர்கள் அமர்ந்து சரியான முறையில் சாமி தரிசனம் செய்யவில்லை என்று செய்ய முடியவில்லை என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் சர்ச்சையுடன் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி