பழங்குடி மக்களுக்கு மீனவர் நல வாரியம் அட்டை வழங்கப்பட்டது.

573பார்த்தது
பழங்குடி மக்களுக்கு மீனவர் நல வாரியம் அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு அருணோதயா நகரில் வசிக்கும் பழங்குடி மக்கள் பழவேற்காடு ஏரி பகுதியில் அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதிகளிலும் ஆற்றுப்பகுதிகளிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

48 குடும்பங்களை சேர்ந்த இவர்களுக்கு இதுவரை மீனவர் என்ற அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. மேலும் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில் தற்போது அந்த கிராமத்திற்கு சாலை வசதியும் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தரும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனை மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் அதன் ஒரு பகுதியாக இம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த மீனவர் அந்தஸ்தை பெறும் மீன்வள துறையின் மீனவர் நல வாரியத்தில் அடையாள அட்டை பெறுவதற்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதன் முதற்கட்டமாக 17 பேருக்கு மீனவர் நல வாரியத்தில் அடையாள அட்டையினை சேர்மன் ரவி ஏற்பாடு செய்து பெற்றுத் தந்தார்‌. இதனை கிராம மக்களுக்கு அருணோதயா நகரிலேயே சென்று வழங்கினார். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து சேர்மனுக்கு நன்றி கூறினர்.

தொடர்புடைய செய்தி