கோடம்பாக்கம் - போரூர் மெட்ரோ தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

69பார்த்தது
கோடம்பாக்கம் - போரூர் மெட்ரோ தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை மேம்பால பாதையாகவும் அமைக்கப்படுகிறது. 

ஒன்பது சுரங்க ரயில் நிலையங்களும், 18 மேம்பால ரயில் நிலையங்களும் இடம் பெற உள்ளன. கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் -- போரூர் சந்திப்பு நிலையத்துக்கு இடையே அஸ்திவார துாண்கள் அமைக்கும் பணிகள், 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தில் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் -- போரூர் சந்திப்பு நிலையம், 8 கி.மீ. தூரம், இரண்டு அடுக்கு நிலையங்கள் மற்றும் ஐந்து ஒன்றடுக்கு நிலையங்களைக் கொண்டது. 

இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட துாண்களை தாங்கும் வகையில், தரையின் கீழே, 2,255 அஸ்திவார துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை முடிக்க திட்டக் குழுவும், ஒப்பந்ததாரர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி