திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் தேமுதிக பிரமுகர் கண்ணதாசன் இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம்
அதிமுகவுடன்
தவெக கூட்டணி குறித்து
விஜய் அவரிடம் கேளுங்கள் என்றும்
பொறுத்திருங்கள் அதிமுக தலைமையில் நல்லதொரு கூட்டணி அமையும் தேர்தல் வர ஒன்றை வருடங்கள் உள்ளது
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கட்டும் எங்கு தேமுதிக போட்டியிடும் என்பது குறித்து தெரிவிக்கும் என்றும்
தமிழ்நாட்டிற்கு
தமிழ் தான் முக்கியம் இங்கு யாரும் எந்த மொழியையும் திணிக்க முடியாது இங்கு இரு மொழிக் கொள்கைதான்
ஒருவர் விரும்பினால் மட்டுமே அந்த மொழியை கற்க முடியும் யாரும் திணிக்க முடியாது என்றும்
நுனலும் தன் வாயால் கடும் கெடும் என்பது போல்
பேசத் தெரியாமல் பேசி நடிகை கஸ்தூரி மிக பெரிய சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார் என்றும்
பெண்களை தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது ஆனால் எத்தனையோ தலைவர்கள் என்னென்னவோ பேசி இருக்கிறார்கள் அவர்களையெல்லாம் கைது செய்யவில்லை ஆனால் தீவிரவாதியை போன்று ஹைதராபாத்திற்கு சென்று போலீசார் கஸ்தூரியை கைது செய்துள்ளனர்
இது வேதனைக்குரியது என்றும்
கஸ்தூரிக்கு பெண்ணான அவருக்கு இது போன்று நடந்துள்ளது அநியாயம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.