திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குடிசை வீடு தீப்பற்றி எரிந்து பீரோவில் இருந்த கோவில் பணம் 2 லட்சம் ரூபாய் ஐந்து சவரன் நகை எலக்ட்ரானிக் உபகரணங்கள் எரிந்து தீக்கிரையாகியது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எகுமதுரை ஊராட்சி அப்பய பாளையம் கிராமத்தில் வசிக்கும் அரிகிருஷ்ணன் என்பவருடைய குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சாம்பல் ஆகியது இதில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஐந்து சவரன் தங்க நகை கிராம கோவிலுக்கு சொந்தமான 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம் துணிமணிகள் பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆகியது விபத்து குறித்து ஆரம்பாக்கம் காவல் துறையினர் கும்மிடிப்பூண்டி வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவால் குடிசை வீடு தீ பற்றி எரிந்ததா அல்லது வேறு காரணமா என ஆரம் பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்